Complaint பிரதமர் ஓய்வூதிய திட்டம் மூலம் பிடித்தம் செய்து பணம்

  • Thanti TV Channel Phone Number, Office Address, Email & Support - பிரதமர் ஓய்வூதிய திட்டம் மூலம் பிடித்தம் செய்து பணம்
    ரவி கோபால் on 2020-04-01 16:19:02

    மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதை உலகிற்கு எடுத்துக் கூறும் தந்தி தொலைக்காட்சிக்கு எங்கள் வணக்கம்.நான் ஒரு மெக்கானிக் தினக்கூலி. பிரதமரின் அறிவுரைப்படி நாங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தாலும் வருமானம் எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த நிலையில் வங்கி கணக்கில் உள்ள எங்களது சேமிப்பை வைத்துதான் மீதம் உள்ள நாட்களை சமாளிக்க வேண்டி உள்ளது. ஆனால் பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மூலம் எங்கள் வங்கி கணக்கில் ரூபாய் 1196 பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது. எப்படி நாங்கள் மீதம் உள்ள நாட்களை நாங்கள் கழிப்பது. அந்த தொகையை இரண்டு மாதம் கழித்து பிடித்தம் செய்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும். தயவு செய்து உதவி செய்யவும்.
    இப்படிக்கு
    ரவி கோபால்