Complaint குடிநீர் வாரிய தலைவர் முதல் 140வது வட்ட உதவி பொறியாளர் வரை பதில் கூற வேண்டும்.

  • Thanti TV Channel Phone Number, Office Address, Email & Support - குடிநீர் வாரிய தலைவர் முதல் 140வது வட்ட உதவி பொறியாளர் வரை பதில் கூற வேண்டும்.
    R.Karunakaran on 2019-09-02 16:40:05

    தயவுசெய்து இந்த தகவலை உங்கள் டிவி செய்தியில் ஒளிபரப்பவும்.

    R.Karunakaran
    147/52 First Floor
    Old Mambalam Road,
    Saidapet, Chennai-15.
    Mobile: 98415 77963


    குடிநீர் வாரிய தலைவர் முதல் 140வது வட்ட உதவி பொறியாளர் வரை பதில் கூற வேண்டும்.

    உங்கள் அனைவரின் ஆணவமா ?
    எங்களை கேள்வி கேட்க மக்கள் யார் என்ற மமதையா ?

    விநாயகர் சதுர்த்தி அன்று கூட
    வீட்டு குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்றால்
    என்ன கருமத்திற்கு குடிநீர் வாரிய தலைவர் முதல்
    வட்ட உதவி பொறியாளர் வரை பணியில் இருக்கிறீர்கள்.

    நடவடிக்கை எடுக்காவிட்டால்
    தண்ணீர் மற்றும் இதர வரிகளை கட்ட மாட்டோம்.


    பொருள் :
    பகுதி-10, 140வது வட்டத்தில் உள்ள பழைய மாம்பலம் தெருவில் உள்ள வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்கள் மூலம் பல நாட்களாக குடிநீர் வரவில்லை.
    ***********


    பலமுறை வாட்ஸ்அப் மூலமாகவும் நேரில் சந்தித்தும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல் இருந்தால் ஒன்று பகுதி-10 பொறியாளர் ரவீந்திரநாதன் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் சமிலால் ஜான்சன் இவர்களுக்கும் சூடு சுரணை இல்லை என்பதுதான் உண்மை.

    மேற்கூறிய பகுதி-10, 140வது வட்டத்தில் உள்ள பழைய மாம்பலம் தெருவில் உள்ள வீட்டு குடிநீர் குழாய்களில் குடிநீர் பல மாதங்களாக விநியோகம் இல்லை.

    இதுசம்பந்தமாக நான் பலமுறை பகுதி-10ல் பணிபுரியும் பகுதி பொறியாளர் ரவீந்திரநாதன் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் சமிலால் ஜான்சன் இருவருக்கும்

    வாட்ஸ் அப் மூலமாக தகவல் அளித்தும் குடிநீர் வாரிய அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக 140வது வட்டத்தில் பணிபுரியும் உதவி பொறியாளர் உட்பட.

    இதுசம்பந்தமாக` 19.08.2019 அன்று பகுதி பொறியாளர் ரவீந்திரநாதனை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்து எப்படி மற்ற தெருக்களில் உள்ள வீடுகளுக்கு தாராளமாக தண்ணீர் வருகிறது ஆனால் பழைய மாம்பலம் தெருவில் மட்டும் தண்ணீர் வரவில்லை என கேட்டேன்.

    எனது அருகில் அமர்ந்து இருந்த துணை பகுதி பொறியாளரிடம் உடனடியாக என்ன பிரச்சினை என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க சொன்னார். ஆனால் இதுநாள் வரை துனை பகுதி பொறியாளர் இந்த பக்கம் வந்தாரா என்பது கேள்விக்குறியே.

    நான் பகுதி பொறியாளரிடம் கடந்த டிசம்பர் மாதம் முதல் நாங்கள் வசிக்கும் பழைய மாம்பலம் தெருவில் தண்ணீர் வரவில்லை பிறகு எதற்கு நாங்கள் தண்ணீர் மற்றும் இதர வரிகளை கட்ட வேண்டும்.

    மேலும் லாரிகள் மூலம் அனுப்பும் தண்ணீரை பெற நாங்கள் பணம் கொடுத்து தான் பெற வேண்டி இருக்கிறது. லாரிகளில் மூலம் விநியோகம் செய்யும் தண்ணீருக்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டும் என அரசு உத்தரவு ஏதாவது இருக்கிறதா ? இப்படி பொது மக்களிடம் வசூலிக்கப்படும் பணத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் பங்கு உண்டா என கேட்டேன்.

    பகுதி பொறியாளர் ரவீந்திரநாதன் எந்த பதிலும் அளிக்காமல் இனி தண்ணீர் தாராளமாக வரும் என கூறினார். ஆனால் தண்ணீர் வரவில்லை.

    எனவே இந்த இமெயில் பெற்ற பதினைந்து ( 15 ) நாட்களுக்குள் 140வது வட்டத்தில் பழைய மாம்பலம் தெருவில் உள்ள வீடுகளுக்கு ஏன் தண்ணீர் வரவில்லை என கண்டறிந்து மற்ற தெருக்களில் தாராளமாக தண்ணீர் வருவது போல நாங்கள் வசிக்கும் பழைய மாம்பலம் தெருவிலும் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லாவிட்டால் தண்ணீர் மற்றும் இதர வரிகளை கட்ட மாட்டோம்.

    மேலும் இதுசம்பந்தமாக மாண்புமிகு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும்.

    ர.கருணாகரன்