Complaint திருநெல்வேலி மாநகரத்தில் புஷ்கரம் தடை-குறித்து-

  • Thanti TV Channel Phone Number, Office Address, Email & Support - திருநெல்வேலி மாநகரத்தில் புஷ்கரம் தடை-குறித்து-
    GNANASKANDHAN A on 2018-09-22 11:14:43

    திருநெல்வேலி மாவட்டம் நிர்வாகம் தங்கள் விவதா நிகழ்வில் இரண்டு இடங்களில் மட்டுமே தடை விதித்துள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டது.அந்த இரண்டு இடங்கள்தான் திருநெல்வேலி மாநகரத்தின் முக்கியமான தீர்த்த கட்டங்கள் அதற்கு தடை விதித்தன் மூலம் திருநெல்வேலி மாநகரத்தில் எங்கும் புஷ்கர விழா நடத்த இயலாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    இரண்டாவது கருத்து புஷ்கரம் விழாவிற்கு திருக்கோயில்களிலிருந்து சுவாமி எழுந்தருள் செய்வது முன் உதாரணம் உள்ளதா என கேட்கப்பட்டது ஆம் முன்உதாரணமுள்ளது கடந்த ஆண்டு நடைபெற்ற காவேரி புஷ்கர விழாவில் திருக்கோயில்களில் பத்துநாட்கள் விழா எடுக்கப்பட்டு சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது இதே இந்துசமய அறநிலைய ஆட்சி துறையினர் முன்னின்று நடத்தியது. இப்போது மறுப்பது என்ன காரணம் அப்போது அனுமதித்த ஆகம விதி
    மூன்றாவதாக குறிப்பிடவது
    நீர் சூழ்ச்சி கங்கையில் அலகாபாத்யில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்ச கணக்கான பக்தர்கள் படகில் சென்றுதான் நீராட செல்ல முடியும் கங்கையின் நீரோட்டத்தை கணிக்க முடியாத நிலையிலும் உரிய பாதுகாப்பு அளித்து புனித நீராட அனுமதி அளிக்கப்படுகிறது. அது போன்ற நிலையா தாமிரவருணி நதியில் உள்ளது சிந்திக்க வேண்டுகிறேன்
    நான்காவது
    நமது பண்பாடு,சமயம், வழிபாடு, வரலாறு, புராணம், சங்ககாலம்,சிலப்பதிகாரம்,சைவ திருமுறை,ஆகமம்,சம்பிரதாயம் என அனைத்திலும் நீர் நிலைகளை வணங்குவது ,புனித நீராடல், சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி கொடுத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தடையேதும் இல்லை அதன் விரிவான விளக்கம் இத்துடன் இணைத்துள்ளேன்.
    ஐந்தாவது
    அரசின் அதிகாரிகள் என்பவர்கள் சமயதலைவர்கள்,பக்தர்களோடு ரயில் தண்டவாளம் போன்று செயல்பட வேண்டும் அது போன்ற நிலை இல்லாதது வருத்தமான செய்தி இங்கு அரசியலுக்கு இடமில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன்.
    அ.ஞானஸ்கந்தன்
    இயக்குநர்
    மதுரை ஞானப்பிரகாசர் மற்றும் சிவப்பிரகாசர் ஆய்வு மையம்
    மதுரை -625001
    9489378385