Complaint Worst Function and activities of Tamil Nadu Government-reg

  • BJP Tamilnadu Office Contact Details - Worst Function and activities of Tamil Nadu Government-reg
    Dr. Rajivgandhi Govindan on 2022-09-27 09:17:40

    அனுப்புதல்
    முனைவர். கோ. ராஜீவ்காந்தி,
    முனைவர் பட்ட ஆய்வாளர் (Post-Doctoral Researcher),
    Investigator Post-Doc FONDECYT (N˚ 3220019),
    Department Chemical Engineering, Biotechnology and Materials,
    Faculty of Physical Science and Mathematics (FCFM),
    University of Chile, Beauchef-851, Santiago, Chile, South America.

    பெறுதல்
    மரியாதைக்குரிய அண்ணாமலை அண்ணன் அவர்கள்,
    தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி,
    மாநில தலைவர்,
    தமிழ் நாடு,
    இந்தியா.
    பொருள் - சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றி
    மதிப்பிற்குரிய அய்யா,
    வணக்கம். என் பெயர் முனைவர். கோ. ராஜீவ்காந்தி, நான் எனது ஆராய்ச்சி படிப்பை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ம் ஆண்டு முடித்தேன். நான் இப்போது எனது உயர்நிலை ஆராய்ச்சிக்காக (Post-Doctoral Research) சிலி (Chile), தென் அமெரிக்கா நாட்டில் இருக்கிறேன். தற்போது தமிழ் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் எனக்கு தமிழ் நாட்டிற்கு வரவே பயமாக இருக்கிறது. ஒரு புறம் தி. மு. க அரசு, அணைத்து பொருள்களின் விலையையும் ஏற்றி கொண்டு இருக்கிறது. அதை பற்றி கேட்டால், இந்துக்கள் எல்லாம் விபச்சாரியின் மகன்கள் என்று சொல்கிறார்கள். நான் இங்கு வரும்போது இருந்ததை விட பல மடங்கு விலையை உயர்த்தி இருக்கிறார்கள். அதை பற்றி கேட்பவர்களை கைது செய்கிறார்கள். இல்லாத பெரியாரை வைத்தி திராவிட மாடல் என்று பொய் சொல்கிறார்கள். நான் தினமும் தமிழ் நாடு செய்தியை படித்து கொண்டு இருக்கிறேன். அதில் இரண்டு விஷயங்கள் மட்டும் தான் தெரிகிறது
    1. ஒன்று தி. மு. க அரசின் விலையேற்றம்
    2. இரண்டு திராவிட மாடல் ஆட்சி
    கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை. நீட் பொய் பிரசாரம், சொத்து வரி, மின் கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதி பொய்கள், பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, என்ன நடக்கிறது தமிழ் நாட்டில் என்று தெரிய வில்லை. எனக்கு பயமாக இருக்கிறது. கள்ள குறிச்சியில் பள்ளியை எரிக்கிறார்கள், பேருந்தை கொளுத்துகிறார்கள், என்ன நடக்கிறது தமிழ் நாட்டில். எனக்கு தமிழ் நாட்டிற்கு வரவே பயமாக இருக்கிறது. போதா குறைக்கு, கடந்த 2, 3 நாட்கள் நடைபெறும் வெடிகுண்டு கலாசாரம் மிகுந்த பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. NIA தனது பணியை செய்கிறது. தவறு இல்லாதவர்கள் பயப்பட தேவை இல்லை. ஏன் இவ்வளவு பயம் இவர்களுக்கு. தப்பு செய்பவர்கள் தானே பயப்படுவார்கள். இவர்கள் ஏன் பயப்படுகிறார்கள். தமிழ் நாடு என்ற பெயரை சுடுகாடு என்று மாற்றி கொண்டு இருக்கிறார்கள் என பயமாக இருக்கிறது. தவறு செய்யும் முன் காவல் துறையின் intelligent பிரிவு கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும். கொலை, கொள்ளை, வெடிகுண்டு போன்ற சம்பவங்கள் நடந்து முடிந்த உடன் கைது செய்ய கூடாது. அவர்களுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது. இதையே நானோ, என் நண்பர்களோ செயதால் விட்டு விடுவார்களா. எனக்கு தமிழ் நாடு வரவே பயமாக இருக்கிறது. நடப்பதை பற்றி நான் வெளியில் பேசினால் கைது செய்து விடுவார்களோ, சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. தி.மு.க தவிர, மற்றவர்களுக்கு இன்னும் தமிழகத்தில் வாய்ப்பூட்டு சட்டம் அமலில் உள்ளது போன்று இருக்கிறது. இந்த அரசு ரவுடிகளுக்கும், கொலைகாரர்களுக்கும் துணையாக இருக்கிறது என்ற அச்சம் இருக்கிறது.
    அதிலும், தற்போது ஆ. ராசா பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லியவருக்கு PCR வன் கொடுமை தடுப்பு சட்டம் என்பது ஏற்கவே முடியாது. அப்படியென்றால் தலித் சமுதாயத்தில் பிறந்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா, அவரை பற்றி கருத்து தெரிவித்தால் வாய் பூட்டு தடை சட்டம் அமலுக்கு வருமா, என்ன கொடுமை இது. இதையெல்லாம் நமது நீதி மன்றம் ஏன் தானே முன் வந்து வழக்காக எடுக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. தமிழ் நாட்டில் நீதி மன்றமும் PCR சட்டத்திற்கு பயப்படுகிறதா, இல்லை ஒரு சமுதாயத்திற்கு ஆதரவாக செயல் படுகிறதா. தமிழ் நாடு தவிர வேறு எங்கும் இப்படியான கொடுமை நடக்காது. PCR சட்டத்தை மறு பரிசீலனை செய்வதற்கான நேரம் வந்து விட்டதாக உணர்கிறேன்.
    இதையெல்லாம் நான் ஏன் உங்களுக்கு கடிதமாக எழுதுகிறேன் என்றால், உங்களுளின் தெளிவான நேர்கொண்ட பார்வை, உண்மையை உரக்க சொல்லும் விதம், தவறை கண்டிக்கும் விதம் ஆகியவை மிகவும் நேர்த்தியாக உள்ளது. இத்தனை வருடங்களாக எதுவெல்லாம் மாநில அரசின் சாதனைகள் என்று என்னை போன்ற படித்தவர்கள் எல்லாம் நம்பி கொண்டு இருந்தோமே, அதெல்லாம் மத்திய அரசு கொடுத்த திட்டங்கள் என்பதை மிகவும் தைரியமாக ஆதாரத்துடன் சொல்லி வருகிறீர்கள். இதற்கு முன் தமிழ் நாடு பாரதீய ஜனதா வை சேர்ந்தவர்கள் சொல்ல மறந்ததை, நீங்கள் ஆதாரத்துடன் சொல்வது சரியான அணுகுமுறை. இதே அணுகுமுறையுடன் தொடர்ந்து செல்லுங்கள். உங்களுக்கான வெற்றி நிச்சயம்.
    மேலும் Passport ஊழல் விவகாரத்தில் நீதி மன்றம் உங்களை பாராட்டியதை அவ்வளவு எளிதாக கடந்து விட்டு போக முடியாது. என் 37 வருட வாழ்க்கையில், நேரடியாக நீதி மன்றம் ஒரு ஊழலை வெளி கொண்டு வந்ததற்கு பாராட்டு தெரிவித்ததை பார்த்ததே இல்லை. உங்களுக்கு என் மரியாதையான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இதே போல் பல ஊழல்களை வெளிக்கொண்டு வந்து சட்டத்தை நிலை நாட்டை வேண்டும் என கேட்டு கொள்கிறேன். உங்களை போன்ற படித்தவர்கள், மிக நுண்ணிய அறிவு படித்தவர்கள் தான் இந்த நாட்டிற்கு முதல்வராக வர வேண்டும். இன்று உங்களை, உங்களுக்கே தெரியாமல், என்னை போன்று லட்ச கணக்கான இளைஞர்கள் பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். என்னை போன்ற பல இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள். நீங்கள் உங்கள் வழியில் தொடர்ந்து செல்ல வேண்டும். இந்த பாதையை மாற்றி செல்ல கூடாது. இன்னும் வேகமாக செல்ல வேண்டும். நிச்சயம் உங்கள் இலக்கை அடைவீர்கள்.
    தமிழ் நாட்டில் எப்படி பாரத பிரதமர் நரேந்திதிர மோடிபற்றி தவறாக பேச முடிகிறது. இதை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. வெளிநாட்டில் அவர் பெயரை சொன்னாலே மிகுந்த மரியாதை உள்ளது. அவர் பெயருக்கு பலர் களங்கம் விளைவிப்பதை Face book, You tube வாயிலாக என்னால் பார்க்க முடிகிறது. இது எப்படி சரியாக இருக்கும். சரியோ தவறோ அவர் நம் நாட்டின் பிரதமர். அவரை பற்றி தவறாக பேச கூடாது. இதை நீங்கள் கண்காணிக்க ஒரு குழு அமைக்க வேண்டும். தயவுசெய்து உங்களின் கீழ் அந்த குழுவை அமைத்து, நீங்களே நேரடியாக மதிப்பீடு செய்து, சட்டப்படி தண்டனை பெற்று கொடுங்கள். அது உங்களால் முடியும். நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் 200 % முதல்வர் ஆவதற்கும், நேர்மைக்கும் தகுதி படைத்தவர்.
    தயவுசெய்து காணாமல் போன, தி.மு.க வின் கை கூலிகளான நடிகர் சூர்யா, கரு. பழனியப்பன், அமீர் போன்றவர்களை முழுமையாக நிராகரியுங்கள். அவர்களை பற்றி பேசவே வெட்கமாக உள்ளது. தற்போது எனக்கு இருக்கும் பயம் எல்லாம், தமிழ் நாடு வந்தால் பழைய படி நன்றாக, சுதந்திரமாக வாழ முடியுமா. இல்லை திருடர்களுக்கு, SDPI, PFI போன்ற தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய இயக்கங்களுக்கு பயந்து, வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டுமா. என் தாய் தந்தை குழந்தைகளை தமிழ் நாட்டில் விட்டு விட்டு நான் இங்கே இருக்கிறேன். கடந்த மாதம் எனது சித்தப்பா இறந்ததற்கு கூட வர முடியாமல் இருக்கிறேன். இன்னும் 10-15 வருடங்கள் வெளி நாட்டில் வேலை பார்க்க அனுமதி இருந்தாலும், நம் நாட்டிற்கு வந்து விடலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இப்போது நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழ் நாடு தீவிரவாத நாடாக மாறி விடுமோ, என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது. இப்போதுதான் தோன்றுகிறது இங்கேயே இருந்து விடலாம் என்று. என் மனைவி குழந்தைகள், அப்பா அம்மா வை நினைத்தால் தான் மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர்களையும் இங்கேயே கூட்டி வந்து விடலாம் என்று தோன்றுகிறது. ஆனால், சொந்த நாட்டை விட்டு வர எனக்கு துளி கூட விருப்பம் இல்லை. என் நாடு என்றாவது மாறும் என்ற நம்பிக்கயில், அண்ணாமலை போன்ற உயர்ந்தவர்கள் இந்த நாட்டை காக்க சீக்கிரம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் தினம் தினம் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
    உங்களுடன் தைரியமாகவும், திறமையாகவும், நுண்ணறிவும் உடைய அண்ணன் அமர் பிரசாத் ரெட்டி, திருச்சி. சூர்யா சிவா, மரியாதைக்குரிய தியாகி அய்யா H. ராஜா போன்ற நல்லவர்கள் உண்மையை யாருக்கும் பயப்படாமல் செய்வது வரவேற்க தகுந்த விசயம். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். அதிலும் அண்ணன் அமர் பிரசாத் ரெட்டி அவர்களின் பணி சிறந்தது மற்றும் போற்றுதலுக்கு உரியது. அவரின் நேர் கொண்ட பார்வையும், பேச்சும், செயலும் இந்த நாட்டில் உள்ளவர்களை ஒரு கனம் திரும்பி பார்க்க வைக்கிறது. என் கடிதத்திற்கு அண்ணன் அமர் பிரசாத் ரெட்டியின் பேச்சும் செயலும் தான் உந்துதலாக இருந்து, எனது பயத்தை போக்கி தங்களுக்கு கடிதம் எழுத வைத்தது. இது போன்ற அரிய மனிதர்கள் தங்களுடன் இருப்பது மிக சிறந்ததாக கருதுகிறேன்.

    ஒரு சராசரி மனிதனாகவும், சராசரி குடி மகனாகவும் , நான் தங்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். தமிழ் நாட்டில் எப்போது முகலாயர்களுக்கு முட்டு குடுக்கும் ஆட்சி அகற்றப்படும். நான் இப்படி பேசினால் என் மீது விமர்சனம் வரும். வந்தாலும் பரவாயில்லை. என் தேசத்தின் மீது குண்டு வைப்பவன் எல்லாம் நல்லவனாக சுற்றும் போது, என் மீது விமர்சனம் வைப்பதில் தவறு இல்லை. அதனால், அதை தங்களின் வாயிலாக தெரியப்படுத்தவும்.
    ஒரு சாதாரண குடிமகனின் கேள்விகளுக்கு பதில் சொல்லி, குடிமகனின் அச்சத்தை போக்குவது ஒவ்வொரு அரசின் கடமை. அதை தமிழ் நாடு அரசு இந்த முறை செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான், ஒரு தமிழ் குடிமகனாக தமிழ் நாட்டில் நான் பயம் இல்லாமல் காலடி எடுத்து வைக்க முடியும். இல்லையென்றால், அது அரசு தீவிரவாதிகளுக்கு மண்டியிட்டதற்கு சமம். அதை இந்த அரசு செய்ய தவறினால், தாங்கள் தைரியமாக போராடி வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    லட்ச கணக்கான அயல்நாடு வாழ் தமிழ் மக்களின் உணர்வுகளை சமர்ப்பணமாக்கி, எங்களுக்குள் பற்றி எறிகின்ற தீயை அணைக்க ஒரு வழியாக இக்கடிதத்தை எழுதுகிறேன்

    இன்னும் நிறைய பேச வேண்டும் என்ற ஆசை. அதை அடுத்த கடிதத்தில் தெரிவிக்கிறேன். தங்களின் பதிலுக்காக கண்ணீருடன் காத்து இருக்கும் தமிழ் நாட்டின் கடைக்கோடி மனிதன்.





    இப்படிக்கு,
    கனத்த இதயத்துடன்,
    முனைவர். கோ. ராஜீவ்காந்தி,



    சாதாரண குடிமகன்,
    Whats Up number - +91-9629372897 (India),
    +56942633154 (Chile).