Complaint Disabled person - Govt. Job permanent - reg

  • Sun TV Network Phone Number, Office Address, Email & Support - Disabled person - Govt. Job permanent - reg
    ANTONY JEYASTEPHEN on 2018-03-21 13:27:47

    மாற்றுத்திறனாளிகள் கண்ணீர்!!! தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளில் 2 ஆண்டுகளுக்குமேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கு அரசாணை (நிலை) எண்.151 சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, நாள்.16.10.2008ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்ட சமூக நலத்துறையில், ஆணையர் திருமதி. எம்.பி.நிர்மலா, இ.ஆ.ப. அவர்களின் நடவடிக்கை எண். 56244/நிர்.6(3)/2008 நாள்.7.7.2009ன்படி உடனாள் பணியில் இருந்த 3 நபர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. குடும்ப நலத்துறையில் அரசாணை எண்.218 தேதி.28.07.2015ன்படி 7 data entry operatorகளுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் கணனி உதவியாளர்களாக விருதுநகர் திரு. S. கணேசன், தூத்துக்குடி திரு. அ. அந்தோணி ஜெய ஸ்டீபன், திருவள்ளூர் திரு. T. துணைவன், தஞ்சாவூர் திரு ஆறுமுகம், திருச்சி திருமதி. பழனியம்மாள், கடலூர் சீதா ஆகியோர் கடந்த 9 வருடங்களாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 7 வருடங்களாக பணி நிரந்தரம் கேட்டு பல மனுக்கள் அனுப்பியும் பணி நிரந்தரம் செய்யப்படாததால் நீதி வேண்டி நீதிமன்றத்தினை அணுகியதால் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பணி நிரந்தரம் செய்து 40 நாளில் அறிக்கை சமர்ப்பித்திட உத்தரவிட்டுள்ளது. பார்வை WP.No.28741/2015 நாள் 10.09.2015. சமூக நலத்துறை முதன்மை செயலாளர் திரு.மணிவாசன் அவர்களும் 2 முறை மாற்றுத்திறனாளிகள் சென்னை சென்று நேரில் சந்தித்ததற்கு உடன் பணி நிரந்தரம் செய்வதாக வாக்களித்தார்கள். இயக்குநர் அலுவலகத்தில் கோப்பு 5 வருடமாக பரிசீலனையில் இருப்பதாக பதில் தருகிறார்கள். மேற்படி 6 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் செய்யும் வரை Publish செய்ய கேட்டுக்கொள்கிறோம்.