Complaint புதிய நூல்களுக்கான மதிப்புரை

  • Sun TV Network Phone Number, Office Address, Email & Support - புதிய நூல்களுக்கான மதிப்புரை
    C N GANGADHARAN on 2018-02-09 12:52:14

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,


    நேற்று தங்களிடம் தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைத்ததற்கு மிக்க மகிழச்சி. என் பெயர் சி.நா. கங்காதரன். நான் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் என்ற ஊரில்; வசிக்கிறேன். யின்-யாங் அடிப்படையிலுள்ள சீன அக்குபங்சர் மருத்துவத்தை நாம் கடந்த ஆறு ஆண்டுகளாக நன்கு படித்து உள் வாங்கியதோடு மட்டுமின்றி இதிலுள்ள உண்மைகளை அனுபவ ரீதியாக உணர்ந்து அதை எளிய தமிழில், பேச்சு தமிழில் “திருக்குறள் வழியில் தொன்மையான சீன அக்குபங்சர் மருத்துவம் (யின்-யாங அடிப்படையில்)” என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 2017 முதல் இது வரை 3 நுhல்களை எம் மனநிறைவோடு இறைவன் அருளால் கொடுக்க முடிந்தது.

    புது நூல்களை உமது தொலைக்காட்சியில் விமர்சனத்திற்கு எடுத்து கொளகிறீர்கள் என்று கேள்விபட்ட நிலையில் என் நுhல்களையும் “புது நூல்களின் வரவு” என்ற தலைப்பில் விமர்சனத்திற்கு எடுத்து கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளின் அடிப்படையில் இந்த மின்னஞலை எழுதுகிறேன். இன்னும் நான்கைந்து வருடங்களில் குறைந்தது 20 நுhல்களையாவது தமிழில் எழுதிவிட வேண்டும் என்பது என் அவா. இதற்கு இறைவனின் அருள் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    இது சம்பந்தமாக உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன் என்பதால் கால் மணி நேரத்தை எனக்கு ஒதுக்கி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இப்படிக்கு
    சி.நா. கங்காதரன்
    சீன அக்குபங்சர் மருத்துவர் மற்றும் ஆசிரியர்
    ஓசூர்
    கைபேசி எண் : 97516 68626
    மின்னஞ்சல் : yinyangparasakthi@gmail.com